மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இருமணலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேசமயம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமானது மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
