தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்துடன் சேர்த்து 18,000 வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் உதவி தொகை வழங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை ஐந்து தவணையாக வழங்கப்பட்ட நிலையில் இனி மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளதாகவும் 2018 ஆம் ஆண்டிலிருந்து விடுபட்டவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி உதவித் தொகை தொடர்பான விவரங்களை அறிய 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.