தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பட்டாசுகளை அதிக அளவு வெடிப்பதால் எழும் மிகையளவு ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதனால் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும் போது பாதுகாப்பான முறைகளை கையாள வேண்டும்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவு காற்று மாசு தன்மையுடன் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே பிடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள நலச்சக்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.