அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  இந்த நாட்டிலே சாதாரணமாணவனும்,  சாமானினும்,  தெருவில் இருப்பவர்களும், வண்டி இழுப்பவர்களும்,  விவசாயிகளும்,  மூடை  தூக்குபவனும் சட்டமன்றத்திற்கு வரலாம். உள்ளாட்சி பிரதிநிதியாக வரலாம் என்று வரலாறை படைத்தவர் அண்ணா.

அதை நடைமுறைப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்யும் , புரட்சி தலைவி அம்மாவும்..  இன்றும் இதை  கடைபிடிக்கிறார் அண்ணன் எடப்பாடியார். இன்னைக்கு அவருக்கு பின்னால் நாங்கள் அணிவகுத்து இருக்கிறோம். கொள்கை எங்களது வேஷ்டி,  கூட்டணி என்பது துண்டு.  எப்போ வேண்டுமானாலும் ஆட்சி மாற்றி கொள்ளலாம்.

கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்க  திராவிட இயக்கத்தினுடைய வாரிசுகள். நாங்க இல்லைனா திராவிட இயக்கமே இல்லை. திமுக கலைஞர் குடும்பத்தின் கட்சி. அது திராவிட இயக்கமே கிடையாது. இன்னைக்கு இருக்கின்ற அமைச்சர்கள் எல்லாம் பாத்தீங்கன்னா…  ஸ்டாலின் கால்ல விழுறாங்க… உதயநிதி காலில்  விழுகுறாங்க. ஏவா வேலு சொல்றாரு இன்பநிதி காலிலும் விழுவோம் என்று…

கலைஞர் குடும்பத்துக்கு தான் நாங்க விசுவாசம். இதுதான் அவர்களின் நிலை. எங்களுடைய நிலை அல்ல. இந்த இயக்கத்தில் எங்க அம்மா ஒரு பிராமணர். எங்க தலைவர் ஒரு மன்றாடியார். அண்ணா அதை தான் நினைச்சார். தந்தை பெரியார் அதைத்தான் நினைச்சாரு. எங்க அம்மா பாருங்க ஒரு பெண் வரணும்னு நினைச்சாங்க…  ஒரு பெண் வந்தாங்க என தெரிவித்தார்.