தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜல்லுத்து பகுதியில் வசித்து வருபவர் தான் பழனிவேல். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்தார். இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷை நாய் கடித்ததாக சொல்லப்படுகிறது. இதை தினேஷ் பெரிதாக எடுத்துக் எடுத்துக்கொள்ளாததோடு சிகிச்சையும் பெறாமல் வந்துள்ளார்.

இந்நிலையில் தினேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு நாய் கடித்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.