கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர் தான் சடையன் என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவர் சேலம் ஆத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு கிருஷ்ணவேணி கடந்த 20 தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து கிருஷ்ணவேணி வீட்டிற்கு வந்ததில் இருந்து செல்போனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததால் சடையன் அவரை கண்டித்துள்ளார். இதனால் வேதனையடைந்த கிருஷ்ணவேணி திடீரென விஷம் குடித்து விட்டார்.

அதன்பின் மயக்கத்தில் இருந்த கிருஷ்ணவேணியை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் கிருஷ்ணவேணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு விஷம் குடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.