தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினாலும் INDIA கூட்டணியில் மாற்றம் வராது என்று CPM மாநிலச் செயலாளர் K. பாலகிருஷ்ணன் உறுதியாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கூட்டணி குறித்து பேசிய அவர், பாஜக கொள்கைகளை ஏதும் அதிமுக எதிர்க்கவில்லை. NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக ஒரு சீட் கூட வெல்லாது என்று கூறியுள்ளார்.