தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இப்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்திலுள்ள முதல்வர் ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.

இதையடுத்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்நிலையில் சென்னையில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதோடு தமிழகத்திலுள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடவும் கோரிக்கை வைத்தார் .