தமிழகத்தில் முதல் பஸ் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் எளிதாக பயணம் செய்கின்றனர். இலவச நகர பேருந்து பயணம் காரணமாக கூடுதல் செலவு இல்லாமல் பெண்கள் பயணிக்கின்றனர்.

ஆனால் இலவச பயணத்தால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் செயல்படுவதாகவும் இதனால் கிராமப்புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளது எனவும் பல புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அரசு எந்த நகரப் பேருந்தில் செயல்பாட்டையும் குறைக்கவில்லை என்றும் கூடுதலாக 4,300 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் அதனைப் போலவே காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் தமிழகத்தில் போக்குவரத்து பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.