தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட வருகின்றன. அதன்படி தற்போது கைரேகை மூலமாக பொருட்கள் வாங்கும் வசதி நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கியூ ஆர் கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியும் அண்மையில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சோதனை முயற்சியாக கோவை, தென்காசி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.