தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய அட்டவணைப்படி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள் டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாறும் கலந்தாய்வு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே வெளியிட்ட அட்டவணையில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.