தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் மே 18 என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள்.

அவர்களுக்கான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கின்றது. அதன்படி எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.