தமிழகத்தின் பொதுவாக முக்கிய பண்டிகை தினங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினங்கள் போன்றவைகளை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று காந்தி ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் அரசாங்கம் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று அக்டோபர் 2-ம் தேதி அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறி சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பது தெரிய வந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
