தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்றமே 11ஆம் தேதி வி ஐ டி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாம் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூடுதல் தகவல்களை அறிய என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.