தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த  நிலையில் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரிசி விலை கிலோ 12 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக அறுவடை காலமான ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் தான் அரிசி விலை குறையும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாகவே அரிசி விலை அதிகரித்து வருகிறது.

நெல் விளைச்சல் குறைவாக இருக்கும் நிலையில் அரிசியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையிலும் தமிழக ரேஷன் கடைகளில் தற்போது வரையிலும் அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.