விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பயணிகள் கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பற்றிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து மூணாறு நோக்கி சுற்றுலாவிற்கு சென்ற கார், விக்கிரவாண்டி அருகே காட்டன் மில் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதையடுத்து கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது காரில் தூக்கத்தில் இருந்த சம்சுதின், கொளத்தூரைச் சேர்ந்த ரிஷி மற்றும் ஆவடி மோகன் ஆகியோர், விபத்து இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த அப்துல் அஜீஸ் மற்றும் தீபக் ஆகியோர், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
