புதுச்சேரியில் நாளை (அக்டோபர் 3) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியான பண்டிகை விடுமுறையை அனுபவிக்கவுள்ளனர்.