சென்னையில் தொடர்ந்து உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.87,040 ஆகவும், ஒரு கிராம் ரூ.10,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலையிலான இந்தச் சரிவு, தொடர்ந்து அதிகரித்த விலை காரணமாக கவலைப்பட்ட நகைத் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் சிறிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.