தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை கரூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அதாவது நம்முடைய சொந்தங்களை இழந்த வேதனையிலும், வருத்தத்திலும் இருக்கும் இந்த சூழலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி னயானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும் இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
