சகோதரர் மறுமலர்ச்சி நல சங்க தலைவர் டி கே ஆர் குருசாமி இன்று காலமானார். இவருக்கு வயது 76. சில நாட்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். சென்னை தாம்பரம் கிருஷ்ணா நகர் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அஞ்சறை செலுத்திய பிறகு அவரது உடல் இன்று மாலை சொந்த ஊரான பரமக்குடிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.