சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அறியப்படாத சர்வதேச வாட்ஸ் அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபகாலமாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அறியப்படாத சர்வதேச அழைப்புகள் மக்களின் தனிப்பட்ட தரவு மற்றும் வங்கி கணக்கு ஆபத்தானதாக முடியலாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது போன்ற சர்வதேச வாட்ஸ் அப் எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை மறுத்து விடுங்கள் என்றும் அவை பற்றிய விவரங்களை 1930 என்ற எண்ணில் பதிவிடுங்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்