முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
“தன் விதியை தானே கணிக்கத் தவறிவிட்டார் ஜோதிடர்” என அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளதோடு, அரசுப் பதவிகளில் இத்தகைய நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே இந்த நியமனம் குறித்துப் பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது அந்த ஆணை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் இந்த பின்வாங்கலை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
