தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதிலிருந்து கரூர் துயரச் சம்பவம் வரை, திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் அந்தக் கட்சியின் பெயரையே உச்சரிக்காமல் வந்துள்ளனர்.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற பேரவையிலும் பொதுக் கூட்டங்களிலும் “தமிழக வெற்றிக் கழகம்” அல்லது அதன் தலைவர் விஜய் என்பதைக் குறிப்பிடாமல், “சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்” போன்ற சொற்றொடர்களை பயன்படுத்தி பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி, “திமுக தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாக ஒரு பொருட்டாகவே கருதவில்லை” என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

“>

அதேசமயம், தி பிரிண்ட் இந்தியா வெளியிட்ட ஒரு செய்தி கட்டுரையில், திமுக தரப்பில் ரகசியமாக ஒரு வாக்குச் சர்வே நடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, “தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், தற்போது அவர்களின் வாக்கு சதவீதம் சுமார் 23 சதவீதமாக இருக்கும்” என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வலுவான கூட்டணி அமைந்தால் இந்த வாக்கு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தீபன் சக்கரவர்த்தி தனது சமூக வலைத்தளப் பதிவில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் “திமுக ரகசியமாகவே பயப்படத் தொடங்கியுள்ளது” எனக் கூறி, பெருமளவில் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.