2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற அரசியல் கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.
குறிப்பாக, கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நீண்ட நேரம் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுடனும் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனால், “விஜய் எந்த அணியுடன் இணைவார்?” என்ற கேள்வி தமிழக அரசியல் சூழ்நிலையை சூடுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், வடஇந்தியாவிலும் காங்கிரஸ்–தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருவது கவனத்தைக் கவர்கிறது. காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு பிரபல ஐடி விங் தளத்தில், “விஜய் மற்றும் ராகுல் காந்தி இணைவார்களா?” என்ற கேள்வியுடன் பல வீடியோ தொகுப்புகள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றின் கீழ், வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் “தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் சேர வேண்டும்; அது இந்திய அளவில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
Not only leaders of Tamilnadu Congress,@INCIndia Leaders from Delhi also wish to join hands with @TVKVijayHQ 🤝
Is it Happening!?🔥🔥 pic.twitter.com/hIgTQgLFAe
— Ashwin TVK (@ashwin_tvk_) October 14, 2025
“>
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தெற்கு–வட அரசியல் இணைப்பின் சாத்தியங்கள் குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
