தற்போதைய அரசியல் சூழலில் திமுக தான் சிறந்த கட்சி என்றும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி இன்னும் தெளிவற்ற அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறிய ஒரு இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், “நான் விஜய் ரசிகன் தான், ஆனால் அரசியலைப் பொருத்தவரையில் திமுக தான் சிறந்த கட்சி. அவர்களிடம் தெளிவும் அனுபவமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஒரு புதிய கட்சி என்பதால், அவர்களிடம் அரசியல் புரிதல் வளரவேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், “படித்த இளைஞர்கள் யாரிடம் கேட்டாலும் திமுக தான் சிறந்த கட்சி எனக் கூறுவார்கள். படிக்காத தற்குறிகள் தான் விஜய் அல்லது அதிமுக, பாஜக போன்ற கட்சிகளை ஆதரிப்பார்கள்,” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆதரவாளர்கள் அந்த இளைஞரின் கருத்தை பாராட்டி “இது தான் நிதர்சனம்” எனக் கூறி வருகிறார்கள்.
நானும் Vijay fan தான், ஆனா DMK தா Best! 🔥#DMK4TN pic.twitter.com/FaofqrAmk2
— #DMK4TN (@DMK4TN) October 14, 2025
“>
அதே நேரத்தில் , தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள், “இது ஒரு தனிப்பட்ட பார்வை மட்டுமே, கல்வி அரசியல் புரிதலுக்கான அளவுகோல் அல்ல” என எதிர்வாதம் செய்கின்றனர். விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட இந்த வீடியோ வித்தியாசமான கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. “ரசிகன் என்றால் கட்சி ஆதரவு கட்டாயமில்லை; அரசியல் முடிவு சிந்தனை அடிப்படையிலேயே இருக்கலாம்” என சிலர் கூற, இன்னொரு தரப்பினர் “இது மறைமுக திமுக பிரச்சாரம்” என குற்றம்சாட்டுகின்றனர். இதனால், ஒரு இளைஞரின் சாதாரண கருத்து தற்போது தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
