கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் தனது வீடியோவில், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி கூறியதாவது — காலை 7 மணிக்கே எடப்பாடி பழனிசாமி வருவதாக தகவல் கிடைத்ததால், அதற்கு முன்பாக எந்த உடலும் அங்கே இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினால் பெயர் அவருக்கே கிடைத்துவிடும் என்பதே அவர்களுடைய நோக்கம்,” எனக் கூறியுள்ளார். மேலும், உடற்கூறாய்வு அவசரமாக நடத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வருவதற்கு முன்பே உடலை அடக்கம் செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது மட்டுமல்லாமல், “விரைவாக தகனம் செய்ய ரூபாய் 1லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது,” என ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள் இணையத்தில் பரவியதுடன், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் அவருக்கு துணை நின்று கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

 

அதே நேரத்தில், ஆளும் கட்சி ஆதரவாளர்கள் “இதற்கு உறுதியான ஆதாரம் இருந்தால் காட்டி பேசட்டும்; ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் கூறுவது தவறு” என சவுக்கு சங்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் கரூர் துயரச் சம்பவத்தைச் சுற்றி அரசியல் சூழல் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.