தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பாதியிலேயே வெளிநடப்பு செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்ட அவர், “சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின். எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும் வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வசனம் பேசியிருக்கிறார்,” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அளித்த தகவலிலும், முதல்வர் கூறிய பதிலிலும் முரண்பாடு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, “கரூர் துயரத்தில் உயிரிழந்தோரின் குடும்ப துயரத்தில் பங்கேற்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்தோம். ஆனால் அதற்கே கிண்டல் செய்தது திமுக அரசின் அறியாமையும் அகங்காரமும் காட்டுகிறது,” எனக் கூறியுள்ளார். “ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்கள் பலியானதைப் பார்த்து ரத்தம் கொதித்துத் தான் கருப்பு பட்டை அணிந்தோம். திமுக அரசு இத்துயரத்தையும் அரசியலுக்குப் பயன்படுத்துகிறது,” எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“>

 

“முதல்வராக பொறுப்புடன் பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் நீங்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினரின் செய்தியாளர் சந்திப்பின் Version 2.0 போல பேசியுள்ளீர்கள். உண்மை சுடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்ட அவரது பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசியல் சூழலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.