மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே ஒரு இதயம் உருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தனது பார்வையற்ற தாயை கையில் பிடித்தபடி, தினசரி கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன் கண்ணீர் விட்டு அழுது கொண்டே தன் விரக்தியை வெளிப்படுத்தினார். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், ஆவணங்கள் சமர்ப்பித்தும் பல மாதங்களாக வாரந்தோறும் அலுவலகத்திற்கு சென்று வர நேர்ந்தது.
மேலும் “என் தந்தை இறந்துவிட்டார், தாய் குருடாக இருக்கிறார்” என்று கதறிய அவர், தனது தாயுடன் சேர்ந்து ஏற்பட்ட இந்த அதிகார அலட்சியத்தால் ஏற்பட்ட வேதனையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
In Indore, MP, this individual had made several trips to the DM office. He had also submitted all his documents.
Despite this, his name was removed from the voter list due to his SIR. This infuriated the man.
Frustration of every Indian on Modi Govt is visible on his face… pic.twitter.com/GMUlerE6H0
— Vijay Thottathil (@vijaythottathil) February 5, 2026
“>
இந்த சம்பவம் பலவீனமானவர்களுக்கு எதிரான அதிகாரத்தின் கடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தந்தையை இழந்து, குருட்டுத் தாயைப் பராமரிக்கும் மகனுக்கு அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பெறுவதற்கே இவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் நிர்வாக அமைப்பின் உணர்வின்மையை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளன. இளைஞனின் கண்ணீரும், தாயின் உதவியற்ற தோற்றமும் இணையத்தில் பரவி, மக்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளன.
