உத்தரப் பிரதேச மாநிலம் முஜாஃப்ஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜான்சத் பகுதியின் பிஸ்வா கிராமத்தில் காதல் கதை ஒன்று மிகவும் கொடூரமான முடிவை எட்டியுள்ளது. ரோஹித் குமார் எனும் இளைஞன் தனது காதலி பிரகதி வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் பேசிய பின்னர், திடீரென கத்தியால் அவளது கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டார். பின்னர், கத்தல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவளது சகோதரியின் முன்னிலையில் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் பிரகதியின் திருமணம் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், இருவரது குடும்பங்களும் அவர்களின் காதல் உறவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
