காடுகளில் வனவிலங்குகளுக்கு இடையிலான வேட்டையாடல் காட்சிகள் அன்றாட நிகழ்வாகவே காணப்படுகின்றன. சில நேரங்களில் சிங்கங்கள் வேட்டையாடும் திகிலூட்டும் காட்சிகள் பதிவாக, சமூக ஊடகங்களில் பரவும். ஆனால், அண்மையில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது ஒரு முதலைக்கும், தண்ணீர் குடிக்க வந்த எருமைக்கும் இடையே நடந்த பரபரப்பான போராட்டம். முதலை ஒன்று திடீரென தாக்கியபோது, தன் உயிரைக் காக்க அந்த எருமை செய்த வீரமும் துணிச்சலும் புல்லரிக்க வைக்கிறது.

சமூக ஊடக தளமான எக்ஸில் @AmazingSights என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் எருமைகள் கூட்டமாக தண்ணீர் குடிக்கின்றன. அந்த நேரத்தில் தண்ணீருக்குள் மறைந்து கிடந்த முதலை ஒன்று, மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒரு எருமையின் முகத்தை கடிக்கிறது.

பயங்கரமான அந்த தருணத்தில், பலரும் “இப்போது எருமை உயிர் தப்பாது!” என தோன்றுகிறது. ஏனெனில், முதலை தன் முழுப் பலத்தையும் பயன்படுத்தி எருமையை தண்ணீருக்குள் இழுக்க முயற்சிக்கிறது.

ஆனால், எதிர்பாராத வகையில் எருமை அதிரடியான முயற்சியுடன் தன்னை காப்பாற்ற முயற்சி செய்கிறது. தன்னிலை மறந்து போராடிய அந்த எருமை, இறுதியில் முதலையின் பிடியிலிருந்து தப்பிக்கிறது. இது உண்மையில் ஒரு தைரியமான நிமிடம்.

1 நிமிடம் 17 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 1,93,000 முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பேர் இது குறித்து கருத்துகளை பகிர்ந்து, எருமையின் துணிச்சலுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.