காட்டில் இரைக்கும் வேட்டையாடுபவருக்கும் இடையிலான துரத்தல் எப்போதும் நிகழ்வதே இயல்பு. சில நேரங்களில் சிங்கம், புலி போன்றவை சிறிய விலங்குகளைத் துரத்தும் காட்சிகளைப் பார்க்கலாம். ஆனால் சில நேரங்களில் அந்த இரை தன்னுடைய புத்திசாலித்தனத்தால் வேட்டைக்காரனின் பிடியிலிருந்து தப்பிப்பதும் அரிதானது.

இதேபோன்ற ஒரு அதிரடியான காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மானை ஒரு கழுதைப்புலியை துரத்தும் காட்சி பதிவாகியுள்ளது. ஆனால் அதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, மான் மரணத்திலிருந்து தப்பித்ததோடு, சில நொடிகளில் மறுபடியும் மற்றொரு ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது.

 

வீடியோவில், ஒரு மான் தண்ணீர் குடிக்க ஒரு குளத்திற்குச் செல்கிறது. அச்சமயம் அங்கிருந்த ஒரு முதலை திடீரென அதனைத் தாக்கி காலைப் பிடிக்கிறது. மான் தப்பிக்க கடுமையாக போராடுகிறது, ஆனால் முதலை விட மறுக்கிறது. இதற்கிடையில், ஒரு கழுதைப்புலி காட்சிக்குள் நுழைகிறது.

அந்த கழுதைப்புலி மானை நோக்கி விரைந்து செல்லும் போது, மான் முதலையின் பிடியிலிருந்து தப்பிக்கிறது. ஆனால் அடுத்த கணமே, அது கழுதைப்புலியின் வேட்டையாக மாறும் நிலைக்கு வருகிறது. அதோடு வீடியோ இங்கே முடிவடைகிறது. இதனால் பார்வையாளர்கள் “மானின் நிலை என்ன ஆனது?” என ஆவலுடன் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இந்த 22 வினாடி வனவிலங்கு வீடியோ, சமூக ஊடக தளமான @TheeDarkCircle என்ற எக்ஸ் பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதுவரை 1.57 இலட்சம் முறை பார்வையிடப்பட்டு, நூற்றுக்கணக்கான பயனர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.