சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் முறையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும் எதிர்பார்ப்புடனும் இருக்கும். நிலத்தில் மட்டுமல்ல தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இதனால் ஆற்றை கடக்க வேண்டும் என்றால் விலங்குகள் பெரும்பாலும் சாவின் விளிம்பை தொட்டு தான் மீண்டு வரும்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மான் ஒன்று தண்ணீர் அருந்தி கொண்டிருக்கின்றது. சில நொடிகள் ஆக்ரோஷமாக மானை வேட்டையாட முதலை எழுந்துள்ளது. நொடி பொழுதில் சுதாகரித்துக் கொண்ட அந்த மான் உயிர் தப்பியுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகி பதற வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Waow Africa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@waowafrica)