பொதுவாகவே அனைவரது வீடுகளிலும் வெளித் தொல்லை என்பது அதிகமாக தான் இருக்கும். இதனை விரட்ட மருந்துகள் மற்றும் எலிபொறி என பல முறைகளில் நாம் முயற்சி செய்திருப்போம். ஆனால் அவற்றையும் தாண்டி இந்த எலிகள் உள்ளே வந்து விடுகின்றன. இதனால் ஏராளமான பின்விளைவுகள் மனிதர்களுக்கு ஏற்படுவதால் இதனை எப்படி விரட்டி அடிக்கலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் மா -மூன்று டேபிள் ஸ்பூன், கற்பூரம் இரண்டு, பற்பசை சிறிது, வினிகிரி தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் மாவு மற்றும் வினிகிரி ஆகியவற்றை போட்டு சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு கற்பூரம் மற்றும் பற்பசை இரண்டையும் நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் கலவைக்குள் கற்பூர பசையை வைத்து உருட்டிக் கொள்ளவும். இதனை எலி வரும் இடத்தில் மா உருண்டைகளை வைக்கவும். இந்த உருண்டைகளை ஒரு தடவை எலி சாப்பிட்டு விட்டால் மீண்டும் உங்கள் வீட்டு பக்கமே வராது. இதனை கொடுப்பதால் எலிகள் சாகாது. மாறாக கற்பூர வாசனை நுகந்த பிறகு எலிகள் அந்த இடத்திற்கு திரும்ப வராது. அதே சமயம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இப்படியான உருண்டை வைப்பது சற்று கவனமாக இருக்க வேண்டும்.