இன்று நிதி பரிவர்த்தனைகளுக்கு பல வசதிகள் உள்ளன. ஏடிஎம், நெட் பேங்கிங் , UPI பரிவர்த்தனை அல்லது காசோலை என்று எதாவது ஒரு முறையின் மூலம்  கணக்கில் இருந்து எடுக்கலாம். ஒரு சில வங்கிகளுக்கு நேராக சென்று எடுக்கும் முறையாக இருக்கும். சலான் அல்லது செக் மூலம் எடுக்க நீங்கள் வங்கிகளுக்கு போக வேண்டி இருக்கும்.  Bearer Cheque, Order Cheque என 2 வகைகள் உள்ளன.

Bearer Cheque காசோலையை கொடுத்து வங்கியில் யார் வேண்டுமானாலும் பணம் பெறலாம். அதை யாரேனும் திருடி வங்கியில் கொடுத்தாலும் பணம் தர வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கவே பின்புறத்தில் கையொப்பமிட வைத்து பணம் தரப்படுகிறது. ஆனால், Order Cheque-ல் பெயர் உள்ள நபருக்கே பணம் தரப்படுகிறது. எனவே, அதன் பின்புறம் கையெழுத்திட அவசியமில்லை.