சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.

இந்த சோதனையில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரே நாளில் 600 சிலிண்டர்கள் பிடிபட்டுள்ளன.

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இந்த அதிரடி நடவடிக்கை பதுக்கல் காரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.