பெங்களூருவில் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் துன்புறுத்தி, அவர் மீது ஸ்னூக்கர் பந்துகளை வீசி எறிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கேமராவில் சிக்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு கிளப்பில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பர்களுடன் ஸ்னூக்கர் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த நபர் காரணமே இன்றி அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தகராறு முற்றிய நிலையில், மேஜையில் இருந்த ஸ்னூக்கர் பந்துகளை எடுத்து அப்பெண்ணை நோக்கி ஆக்ரோஷமாக வீசியுள்ளார். இந்த வன்முறைச் செயல்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட பெங்களூரு காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த டெல்லி நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் பெண்களுக்கு எதிரான இத்தகைய அநாகரிகமான மற்றும் வன்முறைச் செயல்கள் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அதிகரிப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.