தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும். மத்திய அரசின் சமீபத்திய முடிவால் இனி வரிச்சுமை குறையும்.