யூடியூப் வீடியோக்களை டிவிகளில் பார்க்க முடிவது போல இனி ட்விட்டர் வீடியோக்களையும் டிவியில் பார்க்கும் வசதி விரைவில் வரவுள்ளது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

அதன்படி twitter வீடியோ செயலி தேவை என பயனர் ஒருவர் எழுப்பிய தேவைக்கு பதில் அளித்த எலான் மஸ்க், அது விரைவில் வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார். youtube போலவே பல்வேறு விதமான வீடியோக்களையும் புதிய ட்விட்டர் வீடியோ செயலி மூலம் காணலாம் என இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.