டெஸ்லா மற்றும் எக்ஸ் (X) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்த ‘xAI’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி உலக நாடுகளுக்குச் சவால் விட்டு வருகிறார்.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, தேவேந்திர சிங் சாப்லோட் (Devendra Singh Chaplot) என்ற இந்திய ஏஐ (AI) விஞ்ஞானி தற்போது இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏஐ துறையில் மிகச்சிறந்த வல்லுநராகக் கருதப்படும் இவர், இதற்கு முன்பு மெட்டா (Meta) போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

குறிப்பாக, மனிதர்களைப் போலவே இயந்திரங்களும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இவர் கில்லாடி.

ஏற்கனவே எலான் மஸ்க்கின் நிறுவனங்களில் பல இந்தியர்கள் முக்கியப் பொறுப்புகளில் உள்ள நிலையில், தேவேந்திர சிங் சாப்லோட்டின் வருகை xAI நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனத் தொழில்நுட்ப உலகம் வியந்து பார்க்கிறது.