ஈரான் போர் பதற்றம் காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளைச் சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளார்.

அதன்படி, சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை ஹோட்டல்கள் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையலுக்கு விறகு அடுப்புகளைப் பயன்படுத்தி வந்த ஓட்டல் உரிமையாளர்கள், இனி தடையின்றி மின் அடுப்புகளைப் பயன்படுத்த இது உதவும்.

மேலும், மின் அடுப்புகளை வாங்க விரும்பும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கவும், பெண்களுக்குத் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மானியம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்தத் திடீர் சலுகை அறிவிப்பு, சிலிண்டர் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டால் தவித்து வந்த ஹோட்டல் அதிபர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.