டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதியது. இந்த போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் மற்றும் அமெரிக்க கேப்டன் டாஸ் போடுவதற்காக நின்று கொண்டிருந்தனர்.

 

டாஸ் போடும் சமயத்தில் மைதானத்தில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கடந்து சென்றார். இதனை கவனித்த சூரியகுமார் யாதவ் உடனடியாக ஓடி சென்று ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.