தங்கள் பைக்குகள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் பலர் அதில் மாற்றங்களை செய்வது வழக்கம். பைக்குகளில் சிறிய மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்றாலும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் அல்லது ‘பிரஷர் ஹார்ன்’ எனப்படும் அதிக ஒலியுடைய ஹாரன்களைப் பயன்படுத்துவதற்குச் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்படியொரு சம்பவத்தில், நபர் ஒருவர் தனது 100சிசி ‘ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ்’ பைக்கில், ரயில் நிலையங்களில் ஒலிப்பதைப் போன்ற மிகப்பெரிய ரயில் ஹாரனைப் பொருத்தியுள்ளார். இந்த பைக்கை டிராஃபிக் போலீசார் மடக்கிப் பிடித்தபோது, ஒரு போலீஸ் அதிகாரி அந்த ஹாரனை அடித்துப் பார்த்துள்ளார்; அது அப்படியே ரயிலின் சத்தத்தைப் போலப் பயங்கரமாக ஒலித்துள்ளது.
இந்த விதிமீறல் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுத்த டிராஃபிக் போலீசார், அந்த பைக்கை உடனடியாகப் பறிமுதல் செய்ததோடு, அதன் உரிமையாளருக்குப் பெரிய தொகையை அபராதமாகவும் விதித்துள்ளனர். இந்த முழுச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Indians’ honking obsession peaked here.
Bro installed, train horn on his 100cc bike 😂🤦♂️ pic.twitter.com/xvfDcRaxaW
— Vije (@vijeshetty) May 19, 2026
“>
டிராஃபிக் நெரிசலில் திடீரென இப்படிப்பட்ட ரயில் ஹாரனை ஒலித்தால், அருகில் செல்லும் மற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பயந்துபோய் தங்களின் கட்டுப்பாட்டை இழந்து பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு தங்களின் கண்டனங்களையும் குமுறல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
