ஹைவேயில் ரவுடித்தனம் செய்ய முயன்ற பைக்கர்களுக்கு சில நொடிகளில் தகுந்த பாடம் புகட்டப்பட்ட ஒரு பரபரப்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சில இளைஞர்கள் தங்களின் பைக்குகளை ஒரு லாரிக்கு முன்னால் நடுரோட்டில் நிறுத்தி, அந்த சாலையையே மறித்து பந்தா காட்ட முயல்கின்றனர்.
தங்களை யாரும் கேட்க முடியாது என்ற திமிரோடு அவர்கள் நின்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தூரத்திலிருந்து ஒரு ஜேசிபி இயந்திரம் அதிவேகமாக அவர்களை நோக்கி வந்துள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்று அவர்கள் யோசிப்பதற்குள், அந்த ஜேசிபி நடுரோட்டில் நின்ற பைக்கின் மீது பலமாக மோதி, தூக்கி வீசியுள்ளது.
சினிமா பாணியில் மாஸாக என்ட்ரி கொடுத்த அந்த ஜேசிபியின் மோதலைப் பார்த்ததும், அங்கிருந்த இளைஞர்களின் மொத்த பந்தாவும் ஒரே நொடியில் காணாமல் போனது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Satusfying: Man blocks road with bike & creates ruckus. JCB driver casually shoves it aside like absolute cinema 😂 pic.twitter.com/WxZV5KJrbC
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 18, 2026
“>
பலர் இதனை ‘கர்மா’ என்றும், இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சாடியுள்ளனர். மேலும் சிலர், “இந்த சப்பரிகளுக்கு இது நல்லா வேணும்”, “நகரத்தின் அமைதியைக் கெடுப்பவர்களுக்கு இதே போன்ற தண்டனைதான் கிடைக்க வேண்டும்” என்று ஜேசிபி டிரைவரின் அதிரடி ஆக்ஷனைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
