அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். இரு நாடுகளின் தலைவர்களும் ஒருமித்த முடிவுக்கு வரும் வரை இந்த ஒப்பந்தம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த பேச்சுவார்த்தையை நையாண்டி செய்யும் விதமாக ஒரு கிண்டல் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், அதிபர் டிரம்ப் தனது குழுவினருடன் மிகத் தீவிரமாக அமர்ந்து ஈரானியப் பிரதிநிதிகளுக்காகக் காத்திருப்பது போலவும், ஆனால் அவருக்கு எதிரே வெறும் நாற்காலிகள் மட்டுமே இருப்பதையும் காட்டி ஈரானியத் தூதரகம் அமெரிக்காவை வம்புக்கு இழுத்துள்ளது.
அந்த வீடியோவில், நீண்ட நேரம் காத்திருந்தும் ஈரானியர்கள் வராததால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது மொபைலில் “ஈரான் உடன் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடக்கிறது” எனப் பதிவிடுகிறார். சுமார் 2000 ஆண்டுகள் கழிந்த பிறகும் யாரும் வராததால் கோபமடைந்த டிரம்ப், “அவர்கள் வரவில்லை என்றால் வெடிகுண்டு வீசுவோம்” என மிரட்டுகிறார்.
How was the ceasefire extended?
The video is getting viral in Iran. pic.twitter.com/UCldpWjZMO— Iran Consulate – Hyderabad (@IraninHyderabad) April 22, 2026
“>
இறுதியில் ஈரான் தலைமை அனுப்பிய கடிதத்தைப் பிரித்துப் பார்த்தால், அதில் “டிரம்ப், வாயை மூடு” என்று எழுதப்பட்டிருப்பது போலவும், அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரம்ப் வேறு வழியின்றி பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று போர்நிறுத்தத்தை நீட்டிப்பது போலவும் அந்த வீடியோ நகைச்சுவையாகவும் நக்கலாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
