இந்தியாவின் புகழ்பெற்ற தெருவோர உணவான பாணிப்பூரிக்கு இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் ஒருவர், பாணிப்பூரி மீது கொண்ட அதீத காதலால் ஜப்பானிலேயே சொந்தமாக ஒரு பாணிப்பூரி கடையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட செய்தி தற்போது வைரலாகி வருகிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது பாணிப்பூரி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ள அவர், ஆரம்பத்தில் இந்திய உணவுகளை விரும்பாத தனது கணவரையும் தற்போது பாணிப்பூரி ரசிகராக மாற்றிவிட்டதாகக் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் கடைகளுக்குத் தனியாகச் சென்று பாணிப்பூரி சாப்பிடுவதை ரசிக்கும் அந்தப் பெண், மக்கள் நின்றுகொண்டே எளிதாகச் சாப்பிடும் வகையில் ஒரு கடையை உருவாக்கத் தீவிரமாக யோசித்து வருகிறார்.

இந்த வைரல் பதிவைப் பார்த்த இந்திய இணையவாசிகள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, கொல்கத்தாவின் ‘புச்ச்கா’ மற்றும் ‘தகி பூரி’ போன்ற வகைகளையும் முயற்சி செய்து பார்க்கும்படி ஜாலியாகப் பரிந்துரை செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by KANISHK SAINI ♠️ (@saini_kanishk27)

“>

இந்திய உணவுகளின் சுவை கண்டம் கடந்து ஜப்பான் வரை சென்று புதிய தொழில் வாய்ப்பாக உருவெடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.