கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பாபுராஜ். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாபுராஜ் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலம் முடிந்து 3 நாட்களுக்கு முன்பு வெளியே வந்த பாபுராஜ் வீட்டிற்கு செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்தார். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சனுஜ் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிள் திருடு போனதை அறிந்த சனுஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பாபுராஜ் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
