கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் முரிக்கம்புழா பகுதியைச் சேர்ந்தவர் ராகவன்(75). இவர் அரசு மருத்துவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அதே பகுதியில் ராகவன் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தார். இவரது கிளினிக்கிற்கு 23 வயது இளம்பெண் நேற்று சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது சிகிச்சை அளிப்பதாக கூறி ராகவன் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.