சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த ஹோட்டலுக்கு எட்டு வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் திடீரென ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதே ஹோட்டலுக்கு சுரேஷ், நித்தின், அலோக் சிங் ஆகிய மூன்று வாலிபர்கள் உணவு சாப்பிடுவதற்காக வந்தனர்.

அவர்களுக்கும் ஏற்கனவே தகராறு செய்து கொண்டிருந்த 8 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த கோபி என்பவர் அலோக் சிங், நித்தின், சுரேஷ் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடலைகளையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்து போலீசார் கோபி உள்பட 8 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.