உத்திரபிரதேச மாநிலம் பாடல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌசிக் சிங். இவர் ஹம்பூர் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் ரத்தன் ராணி(70) மவுசம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.

உடனே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கண் விழித்து அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.