கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவருக்கும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக வேலை பார்க்கும் ரமீஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட காதலாக மாறியது. கடந்த 9- ஆம் தேதி இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த கடிதத்தில் ரமீஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்தார். மதம் மாற கட்டாயப்படுத்தியதால் நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு ரமீஸ் தான் காரணம் என எழுதியுள்ளார். இதனால் தற்கொலைக்குத் தூண்டியது, பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் ரமீசை கைது செய்தனர்.